Regional02

தஞ்சாவூர் முருகன் கோயில் நிலம் மீட்பு :

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த பூக்காரத் தெரு முருகன் கோயில் நிலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 1,680 சதுர அடி நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அலு வலர்கள் நேற்று முன்தினம் மீட்டனர்.

மேலும், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கட்டியிருந்த கட்டிடங்களை பொக்லைன் மூலம் இடித்து அகற்றி, அங்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT