ஏர்வாடி தர்ஹா உறுப்பினர் வீட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொலை, கொள்ளையில் ஈடுபட முயற்சித்ததாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மேற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சர்வரேஆலம் செய்யது இபுராகீம் (56). இவர் ஏர்வாடி தர்ஹாவின் உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் முகமூடி அணிந்த 2 பேர் சென்றுள்ளனர். அந்த வீட்டில் அந்நியர்கள் உள்ளே வந்தால் எச்சரிக்கும் வகையில் சென்சார் விளக்குகள் எரிந்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து வந்ததும், முகமூடி அணிந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
மர்ம நபர்கள்
தடய அறிவியல் நிபுணர்
போலீஸ் மோப்ப நாய் ரோமியோ வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இதுகுறித்து சர்வரே ஆலம் ஏர்வாடி தர்ஹா போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.