Regional02

அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் புஷ்பம் வரவேற்றார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மகேந்திர பூபதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாநில துணைத் தலைவர் பாக்கியம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850, அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு, மருத்துவப்படி, இலவசப் பேருந்து பயண அட்டை ஆகியவற்றை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மாவட்டப் பொருளாளர் எஸ்.சுசீலா உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT