கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை அமைச்சர்கள் வழங்கினர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளையும், கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியுதவி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளையும் வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று முன்தினம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் கி. பாலசுப்பிரமணியம் தலைமையில் எம்எல்ஏக்கள் ஐயப்பன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதல்வர் பொது நிவாரண நிதியின் மூலம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் கரோனா தொற்றினால் உயிரிழந்ததூய்மை பணியாளர் சேகருடையகுடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையி னையும்,கரோனா தொற்றினால் உயிரிழந்த தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சிதம்பரத்தை சேர்ந்த ராஜுவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை உட்பட 38 பயனாளிகளுக்கு ரூ. 39 லட்சத்து 86 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) பரமேஸ்வரி, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.