நீலகிரி மாவட்டம் கோடநாடுஎஸ்டேட்டில் நடைபெற்ற கொலை,கொள்ளை வழக்கு விசாரணையைபோலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த திருமூர்த்தி என்பவரிடம் நேற்று மதியம் சுமார்1 மணி நேரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் மற்றும் டிஎஸ்பி சந்திரசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விபத்தில் உயிரிழந்த கனகராஜ், திருமூர்த்தியின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அதன்பேரில், கனகராஜ் குறித்த விவரங்களை திருமூர்த்தியிடம் கேட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.