Regional02

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் ரூ.11 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் ராமநாதன் (40). மனைவி தேன்மொழி. இடம் கிரயம் செய்வதற்காக தம்பதி, கடந்த 9-ம் தேதி இருசக்கர வாகனத்தில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது ரூ.11 லட்சத்து 12 ஆயிரம் எடுத்து சென்றனர்.அன்றைய தினம் கிரயப்பணி நடைபெறாததால், முத்தனம்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். கேத்தம்பாளையம் பகுதியில் சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார். புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையத்தை சேர்ந்த எம்.அருண்குமார் (23) என்பரை நேற்று கைது செய்து, ரூ.10 லட்சம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT