Regional02

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது தாக்குதல் :

செய்திப்பிரிவு

பெரியபாளையம் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவரை தாக்கியது தொடர்பாக, 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த கல்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் விஜயலட்சுமி. கல்பட்டு ஆரம்பப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணியை விஜயலட்சுமியின் கணவர் ஜெயவேல் கடந்த 9-ம் தேதி சென்று பார்த்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வெங்கடேசன், அவரது கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் இருவரும் ஜெயவேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது தொடர்பாக, விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், நாராயணன் மீது பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT