Regional01

கடம்பூர் கூட்டுறவு வங்கி முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்டக்குழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கராபுரம் வட்டக்குழு செயலாளர் சுப்ரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, கடம்பூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் வைத்த அடகு நகைகளை முறைகேடாக விற்பனை செய்த சங்க செயலாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடகு வைத்தவர்களிடம் மீண்டும் நகைகளை வழங்க வேண்டும்.

தனி அலுவலர் நியமித்து விசாரணை நடத்தி ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT