Regional02

அண்ணாமலை பல்கலை. வேளாண் புலத்தில் - பூச்சி மேலாண்மை பயிற்சிப் பணிமனை :

செய்திப்பிரிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழக வேளாண் புலத்தில் சர்வதேச பயிற்சிப் பணிமனை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழத்தின் அக தர நிர்ணய செல்லின் வழி காட்டுதலோடு வேளாண் புல பூச்சியியல் துறையில் பூச்சி மேலாண்மையில் மாறுபடும் வரன்முறைகள் என்ற தலைப்பில் இரு நாள் சர்வதேச பயிற்சிப் பணிமனை நேற்று முன்தினம் ஜூம் செயலியில் தொடங் கியது. துறைத்தலைவர் மற்றும் இயக்குநர் (அக தர நிர்ணய செல்) அறிவுடை நம்பி வரவேற்று பேசினார். வேளாண் புல முதல்வர் பேராசிரியர் கணபதி பயிற்சிப் பணிமனையை தொடக்கி வைத்தார். இயக்குநர் மற்றும் இணைப்பேராசிரியர் செல்வ முத்துக் குமரன் இப்பணிமனை பற்றி கூறினார். இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து பல தொழில் நிறுவனங் களின் உயர் பொறுப்புகளில் இருக்கும் 9 பேர் பங்கு கொண்டு சிறப்புரையாற்றினர். பல்கலைக்கழக தேர்வுக்கட் டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் செல்வநாராயணன், பேராசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் பயிற்சிப் பணிமனை பற்றி தங்கள்கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இணைப்பேராசி ரியர் கதிர்வேலு அறிக்கையைசமர்ப்பித்தார். இதற்கான ஏற் பாடுகளை அமைப்பாளர்களான உதவிப் பேராசிரியர்கள் ஆனந்த கணேசராஜா, ரமணன், முத்துக்குமரன், நளினி ஆகியோர் செய்திருந்தனர். இயக்குநர் மற் றும் இணைப்பேராசிரியருமான கேப்டன் கனகராஜன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT