ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பேசும்போது, "முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராக பணியாற்றியவர், வேலூர் ஊரீசு கல்லூரியில் படித்தவர். அவரது நினைவாக தமிழக அரசு ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னால் ஆசிரியர்கள் நிச்சயம் இருப்பார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த் துள்ளனர்" என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாசத்யன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் அருளரசு, ரமேஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணி மாறன், வட்டாட்சி யர்கள் கோபால கிருஷ்ணன், ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.