ஈரோடு மாவட்டம் முகசிபிடரியூரைச் சேர்ந்தவர் டி.நரேந்திரன் (25). இவரைப் பார்க்க நண்பர்கள் 9 பேர் வந்துள்ளனர். பின்னர் இரு கார்களில் அனைவரும் கொடுமுடி அருகே காரணம்பாளையத்தில் காவிரியின் குறுக்கே உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில், கேரள மாநிலம் பந்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கிரண்பாபு (23), மலப்புரம் மாவட்டம் பொன்னானியைச் சேர்ந்த எது (22) ஆகியோர் ஆழமான பகுதிக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியினர் உதவியுடன் இருவரது பிரேதத்தையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மலையம்பாளையம் காவல் துறையினர் விசாரித்தனர்.