பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு கடலூரில் மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
Regional01

கடலூரில் பாரதியார் நினைவு நாள் :

செய்திப்பிரிவு

கடலூர் கேப்பர் குவாரி மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறை அலுவலர் அப்துல்ரஹ்மான், துணை சிறை அலுவலர் சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர்.ஆங்கிலேயர் ஆட்சியின்போது பாரதியார் கைது செய்யப்பட்டு கடந்த 20.11.1918 முதல் 14.12.1918 வரை 25 நாட்கள் கடலூர் மத்தியசிறையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதுபோல சிதம்பரம்  ராமகிருஷ்ண வித்யாசாலா அரசு உதவி பெறும் பள்ளியில் பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவும், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழாவும் நேற்று நடந்தது. பள்ளி நிர்வாகக் குழுத் துணைத்தலைவர் ரத்தினதிருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சிவகுரு முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற பூவாலை அரசுஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். தமிழ் ஆசிரியர்கள் பாரதியின் சிறப்புகள் பற்றி பேசினர்.

SCROLL FOR NEXT