Regional02

100 நாள் வேலை திட்டத்தில் முதியவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே நேற்று 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தில் நேற்று 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செம்மணந்தல் ஓடை தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்து.

அதில் புண்ணியமூர்த்தி (71)என்பவரும் பணி செய்துகொண்டி ருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரைமீட்டு திருநாவலூர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT