“பாரதியின் 100-வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமி ழுக்கான சுப்பிரமணிய பாரதி இருக்கை நிறுவப்படும்’’ என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்று தெலங்கானா ஆளுந ரும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந் தரராஜன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘‘காசித் தெருக்களில் சுதந்திரக் கனலோடு நடமாடிய பாரதியாரை, அவரது நூற்றாண்டு நினைவு நாளில் போற்றும் விதமாக அதே காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படுவதாக அறிவித்ததற்கும், உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்ததற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
பாரதியின் நூற்றாண்டு நினைவு நாளில் அறிவித்ததற்கு நன்றி.