ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர். 
Regional02

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கட்சியினர் ராஜ பாளையம் ஜவகர் மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவ லகங்கள் மீது தாக்குதல் நடத்து வதைக் கண்டித்தும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கட்சியின் நகரச் செயலர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, கிழக்கு ஒன்றியச் செயலர் முனியாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர் ராமர் ஆகியோர் பேசினர்.

SCROLL FOR NEXT