Regional01

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா சேலம், ஈரோட்டில் 56 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று ஊரடங்கு தடையை மீறி விநாயகர் சதுர்த்தியின்போது, தடையை மீறிய இந்து முன்னணி மற்றும் பாஜக-வினர் 25 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோயில் அருகே நேற்று முன் தினம் இந்து முன்னணியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 25 பேர் தடையை மீறி பொதுவெளியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றனர்.

கரோனா தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதம் சார்ந்த விசேஷங்களுக்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், தடையை மீறிய இந்து முன்னணியினர் மற்றும் பாஜக-வினர் ஊர்வலமாக செல்வதை போலீஸார்தடுத்தனர்.

மேலும், இதுதொடபாக மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்பாபு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட 25 பேர் மீது அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஈரோட்டில் 31 பேர் மீது வழக்கு

எனினும், தடையை மீறி பொதுஇடங்களில் வைத்து வழிபடுவோம் என ஒரு சில அமைப்புகள் தெரிவித்திருந்தன. இதையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்படி தடையை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தியது தொடர்பாக மாவட்டம் முழுவதும் 31 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT