Regional01

கார் கவிழ்ந்து விபத்து : மருத்துவ மாணவர் உயிரிழப்பு: 6 பேர் காயம் :

செய்திப்பிரிவு

குமாரபாளையம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா சென்ற நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (22). இவர் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தன்னுடன் படிக்கும் கரூரைச் சேர்ந்த நந்தகுமார் (22), பென்னாகரம் லட்சுமணன் (21) மற்றும் சந்துரு (22) ஊத்தங்கரை கோவர்த்தனன் (22), சங்ககிரி, மோகன் சங்கர் (23), பாலக்கோடு சபரி (21) ஆகியோருடன் காரில் சுற்றுலாவுக்கு புறப்பட்டார்.

காரை நந்தகுமார் ஓட்டினார். குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை பல்லக்காபாளையம் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த 7 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எனினும் மருத்துவமனை செல்லும் வழியில் நவநீதகிருஷ்ணன் உயிரிழந்தார். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT