ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி. சி. துரைசாமி - டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழாவில் நடிகர் சிவக்குமார் விழா மலரை வெளியிட முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர். 
Regional02

ஈரோடு சக்தி மசாலா நிறுவனதம்பதிக்கு பீமரத சாந்தி விழா :

செய்திப்பிரிவு

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழா பெருந்துறையில் நடந்தது. வைபவத்தை, பழநி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். அதிகாலையில் கோ–பூஜை, சூரிய நமஸ்காரத்துடன் தொடங்கி நவக்கிர ஹோமம் உள்ளி்ட்டவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பவளமணி தாரணத்தை பிரபல நடிகர் சிவகுமார், லட்சுமி சிவகுமார் தம்பதியர் அணிவித்தனர்.

விழா மலரை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அரிமா என்.முத்துசாமி, டாக்டர் பி.ஜி.விஸ்வநாதன் – முத்துலட்சுமி விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் காந்தி, சாரதா காளிமுத்து, எஸ்.கே.ஆர்.குமார்மற்றும் குடும்ப மூத்த உறுப்பினர்கள் தம்பதியை ஆசீர்வாதம் செய்தனர்.

ரமேஷ் பிரபா தம்பதி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவூதீன், பரணி பாலு தம்பதி, டாக்டர் கணபதி குடும்பத்தினர், கேசவன் தம்பதி, டாக்டர் அருணாதேவி, டாக்டர் மங்கள், டாக்டர் அஞ்சு தம்பதி, டாக்டர் செந்தில்வேலு தம்பதி ஆசிர்வாதம் வழங்கினர்.

முதல் நாள் மாலை சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநர் செந்தில்குமார், பெற்றோரை போற்றி உருவாக்கிய குறும்படம், தீபா, சுவாமி, சுருதி, செங்கதிர் வேலன் பாடிய பாடல்கள் மற்றும் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் கடந்து வந்த பாதையை ஒளி–ஒலி காட்சியாக திரையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செந்தில்குமார், மருமகள் தீபா, மைத்துனர் வேணுகோபால், கவுசல்யா தம்பதியினர், பேத்திகள் சுவாமி, சுருதி, பேரன் செங்கதிர் வேலன் ஆகியோர் செய்திருந்தனர். 

SCROLL FOR NEXT