முசிறி வட்டம் மேலவடுகப்பட்டியில் குறுங்காடு அமைக்கும் பணியை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் அதிகாரிகள், எம்எல்ஏக்கள். 
Regional01

விரிவாக்கப் பணியின்போது மாநகராட்சி, நகராட்சியுடன் - ஊராட்சிகள் இணைய கட்டாயப்படுத்தவில்லை : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செய்திப்பிரிவு

விரிவாக்கப் பணியின்போது மாந கராட்சி, நகராட்சியுடன் இணைய ஊராட்சிகள் கட்டாயப்படுத்தப் படவில்லை என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில், தச்சன்குறிச்சி, எண்.2 கரியமாணிக்கம், தாளக்குடி, மேலவடுகப்பட்டி, பகளவாடி ஆகிய இடங்களில் 39.8 ஏக்கர் பரப்பளவில் 5.25 லட்சம் நாட்டு மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நடவுசெய்து குறுங் காடு உருவாக்கும் பணியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் ரூ.3.07 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்த விழா வில், 113 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். பின்னர், முசிறியில் நடைபெற்ற விழாவில் 117 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும் அவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, லால்குடி வட்டம், முதுவத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை கே.என். நேரு பார்வையிட் டார். நிகழ்ச்சிகளில் எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டா லின்குமார், ந.தியாகராஜன், எஸ்.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பின்னர் கே.என்.நேரு செய்தி யாளர்களிடம் கூறியது: தமிழகத் தில் தற்போது கூடுதலாக 30 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைக ளில் இனசுழற்சி முறையும், வாக்கா ளர் எண்ணிக்கை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின் றன. மாநகராட்சி, நகராட்சிகளை ஒட்டியுள்ள ஊராட்சிகள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. ஊராட்சிகள் இணைய கட்டாயப்படுத்தப்பட வில்லை என்றார்.

SCROLL FOR NEXT