வேலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்கப்பட்டது. 
Regional02

வேலூர் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.96 கோடிக்கு இழப்பீடு :

செய்திப்பிரிவு

வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன் றத்தில் ‘மக்கள் நீதிமன்றம்’ (லோக் அதாலத்) நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா தலைமை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார்.

இதில், சாலை விபத்து, நில ஆர்ஜீதம், வங்கி காசோலை மோசடி, சிறு குற்ற வழக்கு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், சுமூக தீர்வு காணப்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.1.96 கோடி இழப்பீடு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT