Regional03

இருவருக்கு 3 ஆண்டு சிறை :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குறிச்சி பிரிவு கீழவன்காடு பகுதியில் சின்னம்மாள் (68) என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். புகாரின்பேரில், குன்னத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில் கோவையை சேர்ந்த ராஜா (60) மற்றும் உக்கடத்தை சேர்ந்த ஷேக் (எ) ஷேக்மொகைதீன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, ஊத்துக்குளி நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும், தலா 3 ஆண்டுகள் சிறையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT