Regional01

கரோனா விழிப்புணர்வு போட்டி: 58 மாணவருக்கு பரிசு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று தடுப்பு தொடர்பாக பல்வேறு துறைகளின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையதளம் மூலம் சுவரொட்டி வடிவமைப்பு, ஓவியப்போட்டி, முழக்கத் தொடர், விநாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் 4,230 மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற மாணவர்களில் 58 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT