Regional02

சிவகங்கை மாவட்டத்தில் 38 பதவிகளுக்கு - தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் 2 ஒன் றிய கவுன்சிலர் உட்பட 38 பதவி களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

ஊரக பகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் ஆக.31-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விரைவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு, பதவி விலகல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியத்தில் 6-வது வார்டு (பொது) கவுன்சிலர் பதவி, கண்ணங்குடி ஒன்றியத்தில் 3-வது வார்டு (பொது) கவுன்சிலர் பதவி காலியாக உள்ளன.

அதேபோல் சிவகங்கை ஒன்றி யத்தில் மேலப்பூங்குடி ஊராட்சித் தலைவர் (பொது), ஒக்குப்பட்டி ஊராட்சித் தலைவர் (பொது-பெண்) பதவிகள் காலியாக உள்ளன. இதுதவிர கண்ணங்குடி, சாக்கோட்டை ஒன்றியங்களில் தலா ஒரு ஊராட்சி உறுப்பினர் பதவியும், எஸ்.புதூர், திருப்பத்தூர், திருப்புவனம் ஒன்றியங்களில் தலா 2, தேவகோட்டை, கல் லல் ஒன்றியங்களில் தலா 3, காளையார்கோவில், மானா மதுரை ஒன்றியங்களில் தலா 4, சிவகங்கை ஒன்றியத்தில் 5, இளை யான்குடி ஒன்றியத்தில் 7 என மொத்தம் 34 ஊராட்சி உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன.

காலியாக உள்ள மொத்தம் 38 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT