Regional01

கரூரில் விநாயகர் சிலைகளை அகற்றிய போலீஸார் :

செய்திப்பிரிவு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு நேற்று முன்தினம் நள்ளிரவு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் அங்கு சென்று விநாயகர் சிலையை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போலீஸாருடன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

பின்னர், விநாயகர் சிலையை போலீஸார் அங்கிருந்து அகற்றிச் சென்றனர்.

இதேபோல, வஉசி தெருவில் இந்து முன்னணியினர் வைக்க முயன்ற விநாயகர் சிலையையும் போலீஸார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT