Regional01

காட்பாடியில் பெண்ணிடம் : 5 பவுன் நகை பறிப்பு :

செய்திப்பிரிவு

காட்பாடியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் (54). இவர், காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். பின்னர், இரவு 9.30 மணியளவில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், ரமாபாய் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து ரமாபாய் விருதம்பட்டு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT