விழுப்புரத்தில் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி விருப்ப மனு வழங்கப்பட்டது. 
Regional01

உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் திமுகவில் விருப்ப மனு :

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி திமுக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டது.

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியச் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் அசோக்குமார் தலைமைதாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்டதுணைச் செயலாளர் செ.புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டுஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோ சனைகளை வழங்கி, விருப்பமனுக்களை வழங்கினர். கண்ட மங்கலம் மேற்கு ஒன்றியத் திற்குட்பட்ட 10 ஊராட்சி தலை வர்கள், 9 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT