காட்டுமன்னார்கோவிலில் ஊட்டசத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவு பொருட்களை சிதம்பரம் சார்- ஆட்சியர் மதுபாலன் பார்வையிட்டார். 
Regional01

காட்டுமன்னார்கோவிலில் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசளிப்பு :

செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஊட்டசத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவர் சதியா பர்வீன் தலைமை தாங்கினார். நிகழ்வில் பேசிய கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மாவட்ட அலுவலர் பழனி, “கடலூர் மாவட்டத்தில் 50 சதவீத பெண்களுக்கு ரத்த சோகை உள்ளது. இதை தடுக்க இரும்பு சத்துள்ள உணவு எடுப்பது அவசியம்” என்றார்.

சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள், ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை அமைத்திருந்தனர்.

SCROLL FOR NEXT