Regional02

கடலூர் கல்லூரி பேராசிரியைக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியை ஒருவருக்கு கடந்த 3-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து கல்லூரி தரப்பில் கூறுகையில், “குறிப்பிட்ட பேராசிரியைக்கு கடந்த மாதம் கடைசியில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. வகுப்பு தொடங்கிய போது அவர் கல்லூரிக்கு வரவில்லை. கடந்த 3-ம் தேதியே தொற்று உறுதியானது. அவர் தனது வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒருவர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT