Regional01

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்புக்கு இன்று கலந்தாய்வு :

செய்திப்பிரிவு

சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2021-22-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ட மேற்படிப்புகளுக்கான முதல்கட்ட சேர்க்கை கலந்தாய்வு இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது.

முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான சிறப்பு சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வரும் 13-ம் தேதி எம்ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம் உள்ளிட்ட கலைப்பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

வரும் 14-ம் தேதி எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. எனவே, கல்லூரி அறிவிப்புப் பலகை, தொலைபேசி மூலம் தகவல் பெறும் மாணவிகள், குறிப்பிட்டுள்ள தேதிகளில் வந்திருந்து, கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ரமா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT