கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பிள்ளையார். 
Regional02

கிருஷ்ணகிரியில் - விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், ப்ராயசித்த அஸ்தரஹோமம், விசேஷ திரவிய ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந் தது. இதில், ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர்.

பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.

முடிவில் பக்தர் களுக்கு தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (9-ம் தேதி) காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், நாளை (10-ம் தேதி) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் காலை 5 மணியளவில் சிறப்பு அபிஷேகம், காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடக்கவுள்ளது. இதற்கான ஏற் பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT