Regional01

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.83.9 லட்சம் காணிக்கை :

செய்திப்பிரிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.83.9 லட்சம் ரொக்கம், 3.456 கிலோ தங்கம், 4.140 கிலோ வெள்ளி, 59 அயல்நாட்டு கரன்சிகள் இருந்தன.

கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மேற்பார்வையில் மற்றொரு இணை ஆணையரான அர.சுதர்சன் முன்னிலையில் உதவி ஆணையர்கள் எஸ்.மோகனசுந்தரம், என்.சுரேஷ், கோயில் மேலாளர் லட்சுமணன், ஆய்வர் தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதற்குமுன், கடந்த ஆக.19-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.

SCROLL FOR NEXT