Regional01

800 இடங்களில் தடுப்பூசி முகாம் : நெல்லை ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொழுநோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் 201 பேரில் 30 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில், தேசிய தொழுநோய் தடுப்பு திட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வீடுகளுக்கே சென்று 3 நாள் சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசி வாகனத்தில் ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்கள் இருப்பர்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

3 நாட்களுக்கு இந்த வாகனம் பயணம் செய்து, வீடுவீடாகச் சென்று தொழுநோய் பாதித்த நபர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டத்தில் குறைவாக தடுப்பூசி போடப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவு ள்ளது. வரும் 12-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 800 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தி, 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT