Regional02

ஆவணங்களின்றி தங்கிய - வங்கதேசத்தினருக்கு சிறை :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி தர்கா கே.ஏ.நகர் வெங்கடாபுரம் ஊராட்சி பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த இக்பால் முல்லா (34), அவரது மனைவி தஸ்லீமா (25) மற்றும் இவர்களின் உறவினர் லக்கி (19) ஆகியோர் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருந்தனர். இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில்நேற்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.

இதில், தம்பதி உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT