Regional01

கடலூர், விழுப்புரத்தில் 57 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 62,596 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 51 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 61,323 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 842 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைச் சேர்த்து இதுவரையில் 44,978 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 35 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 44,355 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT