Regional02

தேனியில் குடிநீர் கட்டண உயர்வை : கண்டித்து மார்க்சிஸ்ட் போராட்டம் :

செய்திப்பிரிவு

தேனி தாலுகா செயலாளர் (பொறுப்பு) சி.முனீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். ஆண்டு குடிநீர் கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.2,820 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். நிர்ப்பந்தப்படுத்தி இக்கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஏராளமானோர் நகராட்சியில் மனு கொடுத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, டி.நாகராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் வி.என்.ராமராஜ், வி.ராஜேந்திரன், டி.ஜெயப்பாண்டி கிளைச் செயலாளர்கள் எம்.முத்துக்குமார், கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT