Regional02

அகவிலைப்படி அறிவிப்பு : ஜாக்டோ-ஜியோ வரவேற்பு :

செய்திப்பிரிவு

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் வரும் 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை அறிவித்து இருப்பது அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்களின் மனதில் பால்வார்த்தது போல் உள்ளது.

மேலும் சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியது, கடந்த ஆட்சியில் போராட்டம் செய்ததால் பழிவாங்கப்பட்ட நடவடிக்கைகளான பணி இடமாறுதல், ஊதியப் பிடித்தம், பதவி உயர்வு நிறுத்தம் ஆகியவற்றையும் முதல்வர் ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

மேலும் எங்களின் மீதமுள்ள கோரிக்கைகளையும், தமிழக முதல்வர் கொஞ்சம், கொஞ்சமாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே நிறைவேற்ற தொடங்கியிருக்கும் தமிழக முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ சார்பாகவும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT