Regional01

இளைஞரை வெட்டியவர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் மாடசாமி (30). இவர், சங்கரன்கோவில் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்றிரு ந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சுரண்டையைச் சேர்ந்த பூபதி (19) என்பவர், மாடசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பலத்த காயம் அடைந்த மாடசாமி தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. சுரண்டை போலீஸார் பூபதியை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT