Regional02

பெண் கொலை : கணவர் தலைமறைவு :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த உளுத்தாண்டார் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாசம்(48). இவரது மனைவி பூமாதேவி (40). இத்தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

பூமாதேவி நேற்று, தனது வீட்டில் முகத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் அங்கு சென்று பூமாதேவியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவர் சிவபிரகாசத்தை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT