அருப்புக்கோட்டையில் கணவருடன் சென்ற பெண் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங் கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார்.
அருப்புக்கோட்டை நாகலிங்க நாடார் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி அம்பிகாதேவி. இவர்கள் நேற்று முன்தினம் இரவு அருப்புக்கோட்டை பேட்டை தெருவில் நடந்து சென்றனர். அப்போது முகக் கவசம் அணிந்திருந்த சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் அம்பிகாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து தப்பினார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.