புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 21 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது நேற்று வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கவிதா ராமு விருது, பாராட்டு சான்றிதழ், தலா ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், திராவிடச்செல்வம், சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில்...
மேலும், மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் 10 பேருக்கு ரூ.11.97 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களையும் ஆட்சியர் வழங்கினார்.
விழாவில், முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்பிரமணியம், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பரமேஸ்வரி, பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.