பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக, அதன் அருகேயுள்ள எம்ஜிஆர் நகரில் பொதுப் பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தலைமை வகித்தார்.
தொடர்ந்து, “சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்வதற்காக எம்ஜிஆர் நகரில் அரசு கையகப்படுத்த உத்தேசித்துள்ள இடத்தில் பள்ளிக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சுகாதார நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைந்துள்ளன.
எனவே, இங்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்” என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.