கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடிந்தகரை பகுதியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் இடிந்தகரை அன்னம்மாள் தெருவைச் சேர்ந்த இளங்கோ(46) என்பவர் வீட்டில் 7 அரிவாள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இளங்கோவை போலீஸார் கைது செய்தனர்.