Regional01

பயிலரங்கம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, கிராம உதயம் ஆகியவை இணைந்து கண்தான விழிப்புணர்வு பயிலரங்கை ஊருடையான் குடியிருப்பில் நடத்தின.திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க பொதுச் செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிராம உதயம் சமூக சேவைபொறுப்பாளர் ஜெபா முன்னிலை வகித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி பொறுப்பாளர் சாரதா கருத்துரை வழங்கினார்.

கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் இரா.ராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் ரா.மீனாட்சி, கருவிழி மருத்துவர் வே.அனிதா செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT