வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் குறிஞ்சிப்பாடி தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்ப மேளா நடந்தது. 
Regional02

குறிஞ்சிப்பாடி அருகே - தோட்டக்கலைத் துறை விண்ணப்ப மேளா :

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி தோட்டக்கலைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்ப மேளா வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

கடலூர் தோட்டக்கலை துணை இயக்குநர் அருள் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சுரேஷ், குறிஞ்சிப்பாடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தோட்டக்கலை துறை அனைத்து திட்டங்கள் பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், நுண்ணுயிர் பாசன திட்டம், இயற்கை வேளாண்மை குறித்த விபரங்கள் மற்றும் அதற்குத் தேவையான ஆவணங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. தோட்டக்கலை அலுவலர் சிவகாமி, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் இளைய ராஜா, பார்த்தசாரதி நாகராஜன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT