அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்துவைத்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. அருகில், ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர். 
Regional01

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் :

செய்திப்பிரிவு

மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். அமைச்சர்கள் பேசுகையில், இம்மையத்தின் மூலம் நிமிடத்துக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 150 முதல் 200 நோயாளிகள் வரை பயன்பெறுவார்கள். மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 175 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கூறினர்.

SCROLL FOR NEXT