Regional01

உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் அறிவிப்பு :

செய்திப்பிரிவு

இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:விடுபட்ட இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தேதி அறிவித்ததும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றது திமுக தான். எனவே, எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது.

மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஊராட்சிகளை இணைப்பது குறித்து சட்ட விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT