மாணிக்கம் தாகூர் 
Regional02

அதிமுக ஆட்சியில் அமைச்சரால் வளர்ச்சி பாதிப்பு : மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சரின் தலையீட்டால் தான் தமிழக வளர்ச்சி பாதிக்கப் பட்டது என மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் ஒப்பந்ததாரர்களுக்குப் பலன் சேர்க்கும் வகையில் எடுத்த நடவடிக்கைகளால் பல இடங்களில் பணிகள் நடக்கவில்லை. தற்போது பள்ளிகளுக்கு தண்ணீர் வழங்குவது, கரோனா தடுப்பு நடவடிக் கைகள், ரேஷன் கடை போன்ற பணிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட் டுள்ளது. பணிகளை முடிக்காத ஒப்பந்தாரர் களை கருப்புப் பட்டியலில் வைக்க வேண்டும். அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சரின் தலையீட்டால்தான் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT