சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களுடன் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர். 
Regional03

சிவகங்கையில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

செய்திப்பிரிவு

சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் ஆசிரியர் தினவிழா நடந்தது.

அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் டாக்டர் ராதா கிருஷ்ணனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேருக்கு விருது மற்றும் சான்றிதழை அமைச்சர் வழங்கினார். இவ் விருதுக்கு அரசு வழங்கிய ரூ.10 ஆயிரத்துடன், தனது சொந்த பணம் ரூ.10 ஆயிரத்தையும் சேர்த்து தலா ரூ.20 ஆயிரத்தை ஆசிரியர்களுக்கு அமைச்சர் வழங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அமுதா, சண்முகநாதன், சங்கு முத்தையா, பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சித் தலைவர் மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாதாக வ.உ.சிதம்பர னாரின் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் பேருந்து நிலை யத்தில் புகைப்படக் கண்காட் சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத் துக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்தார்.

SCROLL FOR NEXT