Regional01

கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது :

செய்திப்பிரிவு

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை கார்கூடல்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர் கடந்த மாதம் கள்ளச்சாராய விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் பரிந்துரை செய்தார்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியர் ஸ்ரேயா சிங், சாராய வியாபாரி செல்வராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து உத்தரவு நகல் சிறையில் உள்ள செல்வராஜிடம் போலீஸார் வழங்கினர்.

SCROLL FOR NEXT