Regional02

10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் : ஜவாஹிருல்லா எம்எல்ஏ கோரிக்கை

செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 சிறப்பு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வ.உ.சிதம்பரனார் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்க பெரிதும் காரணமாக இருந்தவர் பக்கீர் முகம்மது ராவுத்தர். பல முஸ்லிம் இயக்குநர்களும் அந்த நிறுவனத்தில் இருந்தனர். இதை வஉசி வரலாற்றில் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 37 முஸ்லிம் கைதிகள் 27 ஆண்டுகள் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்கள் உட்பட தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கொடுத்துள்ளேன்.

சுங்கச் சாவடிகள் தமிழக மக்கள் மீது பொருளாதார தாக்குதலை நடத்துகிறது என்றார் அவர்.

SCROLL FOR NEXT